5ஜி ஸ்மார்ட்போன் வெறும் 8,799 ரூபாய்தான்.
5ஜி ஸ்மார்ட்போன் வெறும் 8,799 ரூபாய்தான்… ஏர்டெலுடன் இணைந்து போக்கோ அறிவித்த சூப்பர் ஆஃபர்!
போக்கோ M6 5G இன் ஏர்டெல் பிரத்தியேக வெர்சன் மார்ச் 10 முதல் இந்தியாவில் ரூ. 8,799 என்ற விலையில் கிடைக்கிறது. ஏர்டெல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் இதன் மூலம் 50ஜிபி மொபைல் டேட்டாவைப் பெறுவார்கள்.
போக்கோ M6 5G டிசம்பர் 2023ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன் MediaTek Dimensity 6100+ SoC ப்ராசசர் கொண்டுள்ளது. 18W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியுடன் வருகிறது. இந்தியாவில் 4 ஜிபி, 6 ஜிபி, 8 ஜிபி என மூன்று ரேம் அம்சத்துடனும் மற்றும் கேலக்டிக் பிளாக், ஓரியன் ப்ளூ மற்றும் போலரிஸ் கிரீன் என மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது.
போக்கோ M6 5G ஆனது 6.74-இன்ச் HD+ (1,600 x 720 பிக்சல்கள்) டிஸ்ப்ளே, 90Hz ரெப்ரஸ் ரேட், 600 nitsபிரைட்னஸ், 180Hz டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் UFS 2.2 , ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MIUI 14 உள்ளிட்ட அம்சங்களை பெற்றுள்ளது.
கேமராவை பொறுத்தவரை, போக்கோ M6 5G ஆனது 50-மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் பின்புறத்தில் LED ஃபிளாஷ் யூனிட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் செல்பி கேமராவில் 5 மெகாபிக்சல் சென்சார் உள்ளது.
போக்கோ M6 5G ஸ்மார்ட்போனின் ரூ. 4 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ. 10,499, 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ. 11,499 மற்றும் 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட் விலை ரூ. 13,499 ஆகும். இந்தநிலையில் போக்கோ M6 5G ஸ்மார்ட்போனுக்கு ஒரு முறை டேட்டா சலுகையுடன் வரும் பிரத்யேக ஏர்டெல் ப்ரீபெய்ட் பண்டில் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி போக்கோ M6 5G இன் ஏர்டெல் பிரத்தியேக வெர்சன் மார்ச் 10 முதல் இந்தியாவில் ரூ. 8,799 என்ற விலையில் கிடைக்கிறது. ஏர்டெல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் இதன் மூலம் 50ஜிபி மொபைல் டேட்டாவைப் பெறுவார்கள், அதேசமயம் ஏர்டெல் அல்லாத யூசர்கள் ஏர்டெல் சிம் டோர் டெலிவரி பெற்றுக்கொள்ளலாம்.
இந்த புதிய சிம்மை உடனடியாக ஆக்டிவேட் செய்தால் 50ஜிபி மொபைல் டேட்டாவைப் பெற முடியும் என இந்தியாவின் போக்கோ நிறுவன தலைவர், ஹிமான்ஷு டாண்டன் சமீபத்தில் அறிவித்துள்ளார். இந்த சலுகையை பயன்படுத்தி போக்கோ M6 5G ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் யூசர்கள் பிளிப்கார்ட்டில் நேரடியாக வாங்கலாம். முன்னதாக கடந்த வருடம், ஜூலை 2023ல், போக்கோ C51 ஸ்மார்ட்போனிற்கு ஏர்டெல் ப்ரீபெய்ட் பண்டில் ரூ.5,999க்கு 50ஜிபி மொபைல் டேட்டா வழங்கியது குறிப்பிடத்தக்கது.
Thanks – News18 Tamil