சந்தைக்கு வரவிருக்கும் புதிய சாதனங்கள் எவை
சந்தைக்கு வரவிருக்கும் புதிய சாதனங்கள் எவை?
அவை என்ன செய்யும்?
CES Tech show என்பது வருடாவருடம் அமெரிக்காவில், Las Vegas Convention Centre இல் நடைபெறும் நுகர்வோருக்கான electronics பாவனைப்பொருட்களின் கண்காட்சியாகும்.
சந்தையில் எதிர்காலத்தில் புதிதாக அறிமுகமாகவிருக்கும் electronic பொருட்கள், புதிய தொழில்நுட்பங்கள் என்பன இந்த கண்காட்சியில் வெள்ளோட்டமாக இடம்பெறுவது வழக்கம்.
Consumer technology association ஆல் நடத்தப்படும் இந்த கண்காட்சியில் உலகெங்கிலுமுள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் தாங்கள் இந்தவருடம் சந்தையில் அறிமுகப்படுத்தவிருக்கும் தொழில்நுட்பங்களைக் காட்சிப்படுத்துகிறார்கள்.
Innovators என்ற புதிய சாதனங்களை/ கருவிகளைக் கண்டுபிடிப்பவர்கள், அதன் patent என்ற உரிமத்தைப் பெற்று உற்பத்திசெய்பவர்கள் அல்லது தயாரிப்பவர்கள், Media என்ற ஊடகங்களைச் சேர்ந்தவர்கள், Influencers என்ற இதன் தயாரிப்பில் செல்வாக்கு செலுத்தக்கூடியவர்கள், Visionaries என்ற எதிர்காலச்சந்தைக்கு வரக்கூடிய புதிய தொழில்நுட்பம் பற்றி எதிர்வு கூறுபவர்கள், மற்றும் பிரதானமாக நுகர்வோர் – அதாவது பாவனையாளர்கள் ஆகிய அனைவரையும் ஒரே கூரையின் கீழ்இணைக்கும் அமைப்புத்தான் CES- Consumer Electronics Show.
Foldable TV -மடித்துவைக்கக் கூடிய தொலைக்காட்சி , generation 5 AI powered think book -மடிக்கணினி, Horizon max 4K projector, on செய்யப்படாதபோது வெறும் ஜன்னல் கண்ணாடி போல மாறும் LG signature OLED T Transparent TV என்று நூற்றுக்கணக்கான புதியகருவிகள் சாதனங்கள் அங்கு இடம்பெற்றாலும், இம்முறை அங்கு விசேடகவனத்தைக்கவர்ந்ததும், பிரதான இடத்தைப்பிடித்துக்கொண்டதும், முதியோருக்கான உடல்நலத்தைப் பேண உதவும், வீட்டில் அன்றாடம் பயன்படுத்தப்படக்கூடிய உபகரணங்களாகும்.
மனிதனின் முதுமை அவனுக்கு வலியையும், நோயையும் உடல் உள தளர்ச்சியையும் தனிமையையும் கொண்டுவந்து சேர்க்கிறது. எளிமையாகவும் ஆனால் துல்லியமாகவும் உடல்நிலையைக்கணிப்பதற்கு AI என்ற செயற்கை நுண்ணறிவுடன்கூடிய உபகரணங்களை AARP American Association of Retired Persons என்ற அமைப்பின் அனுசரணையுடன் Samsung health house என்ற காட்சி அரங்கு பார்வைக்கு வைத்திருந்தது.
பாதுகாப்பான rail – பாதுகாப்பு சட்டங்களுடனும் குறட்டைவிடுவதைத்தடுக்கும் தொழில்நுட்பத்துடனும், Biometric sensors என்ற உடல்நிலையைக்காட்டும் கருவிகளும் இணைக்கப்பட்ட கட்டில் -smart bed அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதைத்தவிர Heart rate and Blood Oxygen levels என்பவற்றைக்காட்டும் toilet seats என்பனவும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
Bathroom scale -எடையைக்கணிக்கும் கருவியில் பல அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. சாதாரண bathroom scale ஐப்போலத்தோன்றும் இது ஒருவர் எதிர்வரும் 12 மாதங்களுக்குள் கீழே விழுந்து கடுமையாகப் பாதிக்கப்படக்கூடுமா என்று சொல்லும். உங்கள் balance சமநிலையை அடிப்படையாக வைத்து இந்தக்கணிப்பு செய்யப்படுகிறது. முதியவர்கள் கீழே விழுவதற்கு carpets – கம்பளங்கள் பிரதான காரணம் என்று சொல்லப்படுகிறது. விழக்கூடிய சாத்தியம் உள்ளவர்கள் வீட்டிலுள்ள carpetகளை அகற்றிவிடலாம் என்றும் ஆலோசனை கூறப்படுகிறது.
முதியவர்களுக்கான தொழில்நுட்பச்சந்தையின் வருடாந்த வருமானம் அமெரிக்காவில் மட்டும் 12 trillion ஆஸ்திரேலிய டாலர்கள் என்று சொல்லப்படுகிறது.
முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் இந்த தொகை தொடர்ந்து அதிகரிக்கும்.
Home based health care என்ற துறையில் AI பிரதான பங்குவகிப்பதாக Samsung health இன் Global head of global health Dr. Hon Pak கூறுகிறார். HealthCare- நலப்பராமரிப்பு இப்போது வீடு சார்ந்த தொழில்நுட்பத்திற்கு மாறுகிறது; முதியவர்களின் பிரச்சனைகளைத்தீர்க்க உதவும் சாதனங்களின் தேவை அதிகமாகிறது. நாம் அதற்குப் போதுமான ஆயத்தத்தில் இல்லை. தொழில்நுடபமே இதற்கு உதவமுடியும் என்று அவர் கூறுகிறார்.
இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த Anura Magic Mirror பற்றி இந்த smart mirrorஐ வடிவமைத்துள்ள Nuralogix Corporation இன் தலைவர் Lindsay Brennan விளக்கினார். இந்த கண்ணாடி உங்கள் முகத்தை 30 நிமிட video வில் பதிவு செய்யும். இதன்மூலமாக சருமத்திற்கு அடியில் ஓடும் இரத்த ஓட்டத்தை கணித்து உடல்நிலை தொடர்பான கணிப்புகளைச்செய்யும் என்று அவர் சொல்கிறார்.
இதன்மூலமாக blood pressure- இரத்த அழுத்தம், pulse – நாடித்துடிப்பு, breathing rates சுவாச விகிதம், facial skin age- முக, சரும முதிர்ச்சி, mental stress – மன அழுத்தம் போன்றவற்றை கணிக்க முடியும். அதுமட்டுமல்ல செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் type 2 diabetes, heart attack and stroke என்பவை ஏற்படும் சாத்தியமுள்ளதா என்பதையும் அது கணிக்கும்.