Widehunt

கோவை சொத்து விற்பனை · தமிழக செய்திகள்

ஆலய தரிசனம்ஆன்மீக செய்திகள்ஆன்மீகம்நம்ம ஊரு சாமிகள்வழிபாடு முறைகள்

குல தெய்வ தோஷம்

குல தெய்வ தோஷம் – குல தெய்வ  வழிபாட்டு முறைகள்.

குலதெய்வம் என்பது ஜோதிட சாஸ்திரத்தில் மிக முக்கியமானதாகவும்  தவிர்க்க முடியாததாகவும் சொல்லப்படுகிறது. ஒருவர் எவ்வளவு பூஜைகள் செய்தாலும் எத்தனை பரிகாரங்கள் செய்தாலும் குலதெய்வ அனுக்கிரகம் இல்லாமல் போனால் அந்த பூஜைகளும் பரிகாரங்களும் பலன் தராது என்பதே ஜோதிட சாஸ்திரத்தின் அசைக்க முடியாத கருத்து.    இதற்காகத்தான்  குலதெய்வ அனுக்கிரகம் இல்லையேல் எந்த தெய்வ அனுக்கிரகமும் இல்லை என்றும் குல தெய்வ வழிபாடு கோடிதெய்வ வழிபாடு என்றும் சொல்லப்படுகிறது.

ஜாதக கட்டங்களில் குறைகள் இல்லாத நிலையிலும் கிரக சஞ்சாரங்களில் பாதக சூழ்நிலைகள் இல்லாத நிலையிலும் ஒரு மனிதனுக்கு பாதிப்புகளும் பிரச்சனைகளும் தொடர்கின்றது என்றால் அதற்கு குல தெய்வ தோஷம் காரணமாக இருக்கும். அதே போல  கிரகங்களின் கோசார பலன்களும்.கிரக பெயர்ச்சியின் நல்ல பலன்களும் முழுமையாக   பலன் தர வேண்டுமென்றால் அதற்கு குலதெய்வ அனுக்கிரகம் என்பது மிக முக்கியமான அம்சமாகும்.

பொதுவாக குலதெய்வ வழிபாடு என்பது இனத்திற்கு இனம். ஜாதிக்குஜாதி குலத்துக்கு குலம்.மாறுபடும். ஒரே ஜாதியில் இருப்பவர்களில் கூட குடும்பத்துக்கு குடும்பம் வழிபாட்டு முறைகளும் சம்பிரதாயங்களும் மாறுபடுகின்றன.இதனால்தான்ஆகமசாஸ்திரத்தினாலும்,புரோகிதர்களாலும்,ஜோதிடர்களாலும் குலதெய்வ வழிபாட்டினை வரையறுத்து கூறமுடிவதில்லை.

பல இடங்களில் குலதெய்வம் என்பது பல தலைமுறைகளுக்கு முன் வாழ்ந்து மறைந்தவர்களாகவும் தங்களின் குல மக்களுக்களின்  நன்மைக்காக  உயிர்தியாகம் செய்தவர்களாகவும் இருப்பதுண்டு.அந்த குலத்தினரால் அவர்களுக்கு செய்யும் நன்றிக்கடனாகவே குல தெய்வ வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இதனால் தான் குலதெய்வ வழிபாட்டினை ஒரு கடமையாகவும் கடனாகவும் சம்பிரதாயங்கள் சொல்கின்றன.

பொதுவாக குலதெய்வ தோஷம் இருந்தால் எந்தமுயற்சிகளிலும் வெற்றி கிடைக்காது, காரணமற்ற காரியதடைகள் அதிகமாகும், உறவுகளில் ஒற்றுமையின்மையும் குடும்ப அமைதியின்மையும் இருக்கும். குறிப்பாக திருமணம் வீடுகட்டுதல் போன்ற சுபகாரிய தடைகள் தொடரும்.

குல தெய்வ  வழிபாட்டு முறைகள்.

காலகட்டளை :

குல தெய்வ வழிபாடுகளை அடிக்கடி செய்ய வேண்டிய அவசியமில்லை அந்தந்த குடும்பத்தின் சம்பிரதாய பின்பற்றுதல்களுக்கு ஏற்றவாறு வருடத்திற்கொருமுறை செய்தாலே போதுமானது. காலகட்டளை இருக்கும் குலதெய்வ வழிபாடுகளுக்கு குறிப்பிட்ட நாளில் மட்டுமே செய்ய வேண்டும். அந்த நாள் தவிர்த்து செய்யகூடாது.பெரும்பாலும் அந்த நாள் அந்த தெய்வத்தின் ஜனனநாளாகவோ.சமாதி நாளாகவோ.பூர்வ நாளாகவோ.பிரதிஷ்டா தினமாகவோ இருக்கும் எனவே அந்த நாளை எந்த காரணத்தை கொண்டும் தவற விடக்கூடாது.

 

காலகட்டளை இல்லாத தெய்வங்களுக்கு  சௌகர்யமான நாளில் வழிபாடு செய்யலாம்.ஆனால் தமிழ்நாட்டில் கால கட்டளை இல்லாத குல தெய்வங்கள் குறைவு.

பரிசாரகட்டளை:

குலதெய்வ பூஜைகளை பொருத்தவரை சுத்த பூஜை .உதிர பூஜை என்று இருவகைகளில் நடத்தப்படுகின்றன.சுத்த பூஜை என்றால் உயிர்பலி கொடுக்காமலும் உதிர பூஜை என்றால் உயிர்பலியுடனும் நடத்தப்  படுவதாகும்.   எந்த பூஜையாக இருந்தாலும் அந்த முறையில் சரியாக பின்பற்றப்பட வேண்டும். இதற்கு பதில் அது என்ற மாற்றம் எல்லாம் குலதெய்வ பூஜையில் செல்லுபடியாகாது.காரணம் குலதெய்வ பூஜை என்பது பாரம்பர்யத்தின் சின்னம்.

குலதெய்வம் தெரியாதவர்களுக்கு:

கணித ஜோதிடத்திலோ எண்கணிதத்திலோ குலதெய்வம் கண்டுபிடிப்பது என்பது சற்று சிரமமானது. குலதெய்வம் தெரிந்து கொள்ள வம்சகள பிரசன்னம் எனப்படும் பிராணதேவதா பிரசன்னத்தின் மூலம் சரியாக கண்டுபிடிக்கலாம். அவ்வாறு கண்டுபிடிக்கும் போது வெறுமனே குலதெய்வத்தின் பெயர் மட்டுமல்லாது இருக்கும் இடம், தற்போதைய நிலை, படைக்கவேண்டிய  பொருட்கள், வஸ்திரத்தின் நிறம்,வழிபாட்டிற்குறிய நாள், நேரம் ஆகியவற்றை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

பல சந்தர்ப்பங்களில் குலதெய்வ கோவிலுக்கு போக முடியாத நிலையோ அல்லது கோவில் சிதிலமடைந்த நிலையோ இருக்கும் அத்தகைய சூழ்நிலையில் குலதெய்வத்தின் அம்சபீடம் வைத்து வீட்டிலேயே வழிபடுவது பலன் தரும்.

தந்த்ர சாஸ்திரத்திலும்  ஆகமசாஸ்திரத்தின் சதாபத்ய அனுஷ்டனத்திலும் தெய்வ சக்திகளை யந்திர ரூபத்தில் ஆவாகனம் செய்து வழிபடும் முறைகள் சொல்லப்பட்டுள்ளன.

குலதெய்வம் தெரியாதவர்கள் பிராணதேவதா பிரசன்ன முறையில் தங்கள் குல தெய்வத்தின் அம்சங்களை அறிந்துக்கொண்டு அந்த அம்சங்களுக்குறைய அட்சர அம்சங்களுடன் குலதெய்வத்தை  யந்திரரூபத்தில் பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் செய்யலாம்.

குலதெய்வம் தெரிந்தும் அதன் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் குலதெய்வத்தின் ஸ்மர்த் பிரசாதத்துடன் (மண், விக்ரகம், கனி, கும்குமம் போன்றவை) அட்சர அம்சத்தை யந்திர பீடமாக்கி வீட்டில் வைத்து வருடம் ஒருமுறை வழிபடலாம்.

 

Karthik Hitech

Karthik Hitech writes for Widehunt on property and land across Coimbatore and Tamil Nadu, alongside Tamil Nadu news, share market and health coverage.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *