Widehunt

கோவை சொத்து விற்பனை · தமிழக செய்திகள்

டாப் நியூஸ்ரியல் எஸ்டேட்வாஸ்து சாஸ்திரம்

வீட்டில் சுபிட்சம் பெருக அடி பலன்கள்

வீட்டில் சுபிட்சம் பெருக அடி பலன்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம்

அடி பலன்கள்: கடவுள் அருள் கிடைக்கும் வீட்டில் சுபிட்சம் பொங்கும். செல்வமும், போகமும் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும், நிறைந்திருக்கும்.

8 அடி பலன்

வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற்றங்கள் உண்டாகும். உயர்ந்த பதவிகள் கிட்டும். பொருளாதார நிலை மிக வேகமாக உயர்ந்துவிடும். தெய்வ அருள் உண்டு.

10 அடி பலன்

பொருளாதார நிலையில் சரிவு என்பதே ஏற்படாது. செல்வநிலை மேலும், மேலும் உயர்ந்து கொண்டே போகும். எதிர்பாராத வகையில் பொருள் வரவு ஏற்படும். திடீர் யோகம் உண்டு.

11 அடி பலன்

எந்த காரியத்திலும் தோல்வி என்பதே ஏற்படாது. வெற்றிக்கு மேல் வெற்றியாகக் குவியும். குடம்பத்தில் குதூகலம் நிலவும் செல்வ நிலை உயரும்.

16 அடி பலன்

சமுதாயத்தில் தனிப்பட்ட செல்வாக்கு உண்டாகும். பொருளாதார நிலை மிக வேகமாக உயரும் பலவகையான பொருள்கள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

17 அடி பலன்

தொழில் அல்லது வியாபாரத்தில் நிறைந்த வருமானம் கிடைக்கும். எதிரிகளை எளிதாக வீழ்த்த முடியும். எந்த காரியத்திலும் வெற்றி காணலாம்.

20 அடி பலன்

பண்ணைத் தொழிலில் சிறப்பான லாபம் ிகடைக்கும். பல கைகளிலும் வருமானம் பெருகும். உ்லாசமான வாழ்க்கை அமையும். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

21 அடி பலன்

வாழ்க்கையில் தோல்வி என்பதே ஏற்படாது. எல்லா முயற்சிகளிலும் வெற்றியே கிடைக்கும். பொரளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். பொன்னும பொருளும் சேரும்.

22 அடி பலன்

மனதில் தைரிய உணர்வு மேலோங்கி யிருக்கும். எதிரிகளின் சதித் திட்டங்களை எளிதாக முறியடிக்க முடியும், வீண் பழிகள் வேகமாக அகலும்.

26 அடி பலன்

உற்சாகமும், உல்லாசமும் நிறைந்த வாழ்க்கை அமையும். போகமும் யோகமும் தேடிவரும். பொருளாதர நிலை செழித்தோங்க, பொன்னும் பொருளும் சேரும்.

27 அடி பலன்

பொது வாழ்க்கையில் புகழும் செல்வாக்கும கிட்டும். பலரும் வலிய வந்து, உதவி செய்வார்கள். அதிகாரம் செய்யக் கூடிய பதவிகள் தேடிவரும்.

8 அடி பலன்

கடவுள் அருள் உண்டு. வேதனைகளும், துன்பங்களும். விலகி ஓடும். இன்பமாக வாழக்கை அமைக்க எல்லா முயற்சிகளிலும எளிதாக வெற்றி கிட்டும்.

29 அடி பலன்

பண்ணைத் தொழிலில் பால் வியாபாரம் ஆகியவற்றில் நிறைந்த லாபம் கிட்டும். வாழ்க்கயைில் சிறந்த முன்னேற்றங்களைக் காணலாம். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

30 அடி பலன்

புத்திர பாக்கியம் தாராளமாக இரக்கும். எதிர்பாராத சொத்துக்கள் கிட்டும். திடீர் யோகம் உண்டு. பொருளாதார நிலை மகவும சிறப்பாக இருக்கும்.

31 அடி பலன்

நல்லவர்கள் நாடிவந்து உதவி செய்வார்கள். தீயவர்கள் விலகியோடுவார்கள். பொன்னும் புகழும் கிட்டும். வாழ்க்கையில் உயர்வான நிலை உண்டாகும் காரியசித்தி உண்டு.

Karthik Hitech

Karthik Hitech writes for Widehunt on property and land across Coimbatore and Tamil Nadu, alongside Tamil Nadu news, share market and health coverage.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *