ஒன்று முதல் ஒன்பது மாதம் வரை – தாயின் வயிற்றில் சிசு வளர்ப்பு
எதிர்கொள்ளும் சீரான வளர்ச்சியை காணலாமா….
1. முதல் மாதம்: கரு, கருப்பை சுவர்களில் பற்றி பிடித்து வளரும்.
சிசு மூன்று பாகங்களாகத் தெரியும்.
முதல் பாகம்: மூளை, நரம்பு மண்டலம், சருமம், கண் , காது, போன்றவைகளாக மாறும்.
இரண்டாம் பாகம்: சுவாசக் கட்டமைப்பு ,வயிறு.
முன்றம் பாகம் : இதயம், ரத்தம், தசை,எலும்புகளாக மாறும்.
2. இரண்டாம் மாதம்: சிசுவிற்கு முகம் உருவாகிறது. கண் பகுதி குழி தோன்றும். மூளை, இதயம், சுவாசப்பகுதி, கிட்னி போன்ற உள் உறுப்புகளின் வளர்ச்சி தொடங்கும். இதயம் மெல்ல செயல்படத் தொடங்கும்.
- மூன்றாம் மாதம்: உடலை விட இப்போது தலை பெரியதாக இருக்கும். நெஞ்சுப் பகுதி துடித்துக் கொண்டிருக்கும். அல்ட்ரா சவுண்ட் டிடெக்டர் மூலம் சத்தத்தை அறியலாம்.
4. நான்காம் மாதம்: தலை முடி, புருவம் போன்றவை லேசாக வளர்ந்திருக்கும். கண்கள் மூடி இருக்கும்.5. ஐந்தாம் மாதம்: சிசுவின் அசைவை தாய் முதல் முறையாக உணர்வார். “லாலுனுகோ” என்ற மென்மையான ரோமங்களால் சிசுவின் உடல் முடப்படும். பிரசவத்திற்கு முன்பு அந்த ரோம கட்டமைப்பு மறைந்து போய்விடும்.
6. ஆறாம் மாதம்: சிசுவின் உடல் கிட்டத்தட்ட முழுமையடைந்து குழந்தையாக உருவாகும். சருமம் கெட்டியாகும். “வெர்னிக்ஸ்” குழந்தையை பாதுகாப்பாய் முடிக் கொள்ளும் . ஆம்னியாட்டிக் திரவத்தில் இருந்து குழந்தை தனக்கு தேவையான சத்துக்களைப் பெறும். குழந்தையின் விக்கலை அம்மாவால் அறிந்து கொள்ள முடியும்.
7. ஏழாம் மாதம்: குழந்தை கண் திறக்கும். எடை கிட்டத்தட்ட ஒரு கிலோவாகும்.
8. எட்டாம் மாதம்: நகம் வளரும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். கருப்பை வாயை நோக்கி தலைகீழாக குழந்தை செல்லும்.
9. ஒன்பதாம் மாதம்: ஈரல், கிட்னி போன்றவை வேகமாக செயல்படும். எட்டு முதல் பத்து தடவை குழந்தையின் அசைவு தெரியும். பிரசவத்திற்கு தயராகும் நிலை உருவாகும்.
பெண் இனத்தின் பெருமைக்கும் அதிகபட்ச அக்கறைக்கும் உரிய காலம் மகபேறு காலமும் பாலுட்டும் காலமும் இந்த காலத்தில் உணவில் அதிகம் கவனம் தேவை.
கருத்தரிக்க முடிவு செய்த உடனேயே பெண்ணுக்கு போலிக் ஆசிட் அவசியம் என்கிறது இன்றைய அறிவியல் அதாவது கருத்தரிப்பு நிகழ்வதற்கு முன்பிருந்தே போலிக் ஆசிட் (folic acid)எடுத்திருக்கவேண்டும் அப்போதுதான் பிற க்கும் குழந்தை நலமாக இருக்கும்.
கரு உருவான பெண்கள் தினசரி உணவில் கீரை ,பாசிபயிறு, பசுநெய்,பசும்பால் சேர்த்து கொள்வது நல்லது .பசும்பாலில் பீட்டா கரோட்டீன்கள் அதிகம் உள்ளன இது கர்ப்பிணிகளுக்கு மிகவும் தேவை.
முதல் முன்று மாதம் வாந்தியை ஏற்படுத்தும் காலம் இந்த சமயத்தில் வயிற்று போக்கு ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். தொடர்ந்து பழச்சாறுகள் எடுத்து கொள்ள வேண்டும் .குறிப்பாக மாதுளை சாறு வாந்தியை நீக்கிட உதவும் இரும்புசத்து நிறைந்ததும் இந்த காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் கத்திரிக் காய், மக்காசோளம் , முள் இருக்கும் கடல் மீன்கள்.
கவனிக்க வேண்டிய விஷயம்
கர்ப்பிணி பெண்ணின் பெற்றோரில் எவருகேனும் நீரிழிவு (Gestational Diabetes) நோயிருப்பின் அந்த பெண்ணிற்கும் அந்நோய் ஏற்படகூடும் அதை தவிர்க்க” லோக்களைசமிக் ” தன்மையுடைய உணவுகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும் நார் பொருள் நிறைந்த கீரை, வெந்தயம் ,புழுங்கல் கைகுத்தல் அரிசி ,கேழ்வரகு போன்றவை.
நான்காம் மாதம் முதல் ; – மகவு வளர துவங்கும் காலம் மலச்சிக்கல் ,காலில் சுரப்பு ஏற்படாமல் இருக்கபார்லி கஞ்சி ,முள்ளங்கி, வெள்ளரி, வாழைத்தண்டு போன்ற பச்சடிகளை சாப்பிட்டு வரவேண்டும்.இந்தகால கட்டத்தில் பசலைகீரை ,தண்டுகீரை பாசிபயிறு டன் சாப்பிட்டு வர வேண்டும்.
காய்ந்த திராட்சை ,குல்கந்து தினசரி சாப்பிட்டு வர வேண்டும் தவிர்க்க வேண்டிய உணவுகள் :- எண்ணெயில் பொரித்த உணவுகள்.
பிரசவத்திற்கு பின்
முதல் ஒரு வாரத்திற்கு அதிக புலி ,காரம் ,எண்ணெயில் பொரித்த உணவு ஆகிவற்றை தவிர்க்க வேண்டும் துவர்ப்புமிக்க உணவுகளையும் முதல் ஏழு நாட்கள் தவிர்க்க வேண்டும் .பிறகு சத்து மிகுந்த உணவுகளை படிப்படியாக எடுத்து கொண்டால் தாயிக்கும் , குழந்தைக்கும் நலம்.