widehunt
டாப் நியூஸ்ரியல் எஸ்டேட்ரியல் எஸ்டேட் தகவல்கள்வாஸ்து சாஸ்திரம்

வீட்டில் மணி பிளான்ட் செடி வளர்த்தால்

மணி பிளான்ட்.. வீட்டில் வைத்தால் என்னாகும் தெரியுமா?

மணி பிளான்ட் செடியின் மகிமைகள்:

மணிபிளான்ட் செடியானது நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனை காற்று மூலம் அதிகப்படுத்தி தருகிறது. அதுமட்டுமில்லாமல் காற்றில் வரும் மாசுக்களையும் குறைத்து நமக்கு சுத்தமான காற்றையும் தருகிறது.

சிலபேர் வீட்டில் மணி பிளான்ட் செடியை வீட்டு உள்ளேயும் வைத்திருப்பார்கள். ஏன்னென்றால் வீட்டில் இருக்கும் டிவி, கம்ப்யூட்டர் போன்ற பொருட்களில் இருக்கும் வைபிரேஷன் மூலம் பாதிப்பு ஏற்பட கூடாது என்று வைப்பார்கள்.

இந்த செடியின் இலைகள் இதயத்தின் வடிவில் இருப்பதால் ஏதோ ஒன்று சொல்ல வருவது போல இருக்கும். இந்த இதய வடிவம் நமக்கு என்ன சொல்கிறது என்றால் நல்ல ஒரு அன்பு, சந்தோஷம் பெருகி வரும் என்று கூறுவது போல இருக்கும்.

மணிபிளான்ட் செடியானது எந்த அளவுக்கு வளர்ந்து போகிறதோ அந்த அளவுக்கு நம் வீட்டில் சந்தோஷமும் அதிகமாகும் என்று சொல்கின்றனர்.

மணி பிளான்ட் செடி வளர்க்கும் முறை

மணிபிளான்ட் செடியை வளர்த்தால் மட்டும் போதாது, அதனை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதையும் ஆலோசிக்க வேண்டும். மணிபிளான்டில் பாசிட்டிவ் எனர்ஜி அதிகம் இருப்பதால் அதனை

தென்கிழக்கு திசையில் வளர்ப்பது நல்லது.

தென்கிழக்கு திசையில் வளர்ப்பதால் வீட்டில் செல்வ வளர்த்திற்கும், வருமானத்திற்கும் பஞ்சமே இருக்காது.

மணி பிளான்ட் செடியை வளர்க்கும் பொழுது முதலில் கண்ணாடி பாட்டில் இல்லையென்றால் வாட்டர் பாட்டிலில் வளர்க்கலாம். பிறகு அந்த கொடியின் சிறு தண்டினை நீர் நிரப்பி வீட்டிலோ அல்லது வெளியிலோ வைக்கலாம்.

இந்த செடி வேர் விடும் வரை தண்ணீரில் வைத்து பிறகு வேர் வந்ததும் மண் நிரப்பப்பட்ட தொட்டியில் மாற்றி வளர்க்க வேண்டும்.

மணிபிளான்ட் வேகமாக வளர வேண்டும் என்றால் தண்ணீர் ஊற்றி மண் வறட்சி ஆகாத அளவிற்கு வளர்க்க வேண்டும். மணிபிளான்ட் செடியை சூரிய வெளிச்சத்தில் வைப்பதால் அதிக வளர்ச்சி அடைகிறது.

இந்த செடி செழிப்பாக வளர்ந்த உடன் மாதத்தில் ஒரு முறையாவது இந்த செடிகளின் இலைகளை கத்திரிக்கோல் கொண்டு நறுக்கி விட்டால் அழகாக இருக்கும். அதன் பிறகு அதன் கொடி படர்ந்த பிறகு வீட்டில் வெளியே அழகா அலங்கரித்து கட்டலாம்.

மணி பிளானட் மண்ணில் வளர்ப்பது எப்படி.?

இந்த செடியை வைக்கும் பொழுது மண்ணில் வேப்பம் புண்ணாக்கை தண்ணீரில் கரைத்து பின்பு செடியை வைக்கவும்.

வேப்பம் புண்ணாக்கு கலப்பதன் மூலம் செடிகளில் பூச்சி வெட்டு தொல்லை இருக்காது. செடியும் நன்றாக வளரும். மணிபிளான்ட் கொடி கீழே படராமல் இருக்க அந்த தொட்டியில் ஒரு நீளமான கம்புகளை வைத்தால் கம்பை சுற்றி வளரும். இந்த முறையில் நீங்களும் உங்க வீட்டில் வளர்த்து பாருங்கள்.

மணி பிளான்ட் செடிகள் தரும் பல்வேறு மருத்துவ நன்மைகள் என்னென்ன தெரியுமா?

காற்றில் உள்ள கார்பன் மோனாக்சைடு, ஃபார்மாடிகைடு, பென்சைன் போன்ற நச்சுக்களை ஈர்த்துக்கொண்டு, ஆக்சிஜனை வெளியிடும் தன்மை இந்த மணிபிளான்ட்டுக்கு உண்டு.

காற்று:

இதன்காரணாக, நம்மை சுற்றியுள்ள மாசு காற்று உள்வாங்கப்பட்டு, நமக்கு ஆரோக்கியம் தரக்கூடிய நல்ல ஆக்ஸிஜைனை வெளியிடுகிறது.. அந்தவகையில், ஆக்ஸிஜனை வெளியிடும் தாவரங்களில் முதலிடத்திலும் உள்ளது மணி பிளான்ட்கள்..

மாசு அதிகரிக்காமல், அந்த மாசை கட்டுப்படுத்துகிறது இந்த செடிகள். அதனால்தான், எப்போதுமே இந்த செடியை வீட்டுக்குள், முக்கியமாக ஹால், சமையலறை பகுதிகளில் வைக்க சொல்கிறார்கள்.

நுழைவாயில்:

இதற்கு இன்னொரு காரணமும் உண்டு.. ஹாலிலும், வீட்டின் நுழைவாயிலிலும் இந்த செடிகளை வைப்பதால், டிவி, செல்போன் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுக்களையும் இந்த செடி கிரகித்து கொள்கிறது.

அதேபோல, எந்த வீட்டில் மணி பிளான்ட்கள் வளர்க்கப்படுகிறதோ, அங்கெல்லாம் பாம்பு, பூரான், தேள் போன்ற விஷப்பூச்சிகள் வருவதில்லையாம். அதைவிட முக்கியமாக, எதிர்மறை ஆற்றல்களை இழுத்துகொண்டு, நேர்மறை ஆற்றல்களை வீட்டில் அதிகரிக்க செய்யும் தன்மை இந்த மணி பிளான்ட்ட்களுககு உண்டு.. இதனால் வீட்டில் இருப்பவர்களின் உடல் நிலையும் மன நிலையும் பாதுகாக்கப்படுகிறது.

அசுத்தமான காற்றை வடிகட்டுவதுடன, ஆக்ஸிஜன் வரத்தை அதிகரிக்க செய்கிறது இந்த வகை செடிகள்.. அத்துடன்,பதட்டம் மற்றும் மன அழுத்தத்தை குறைத்து தூக்கக்கோளாறுகளையும் மேம்படுத்துகிறதாம்.

எப்படி வளர்ப்பது:

இந்த செடியை வளர்க்க வேண்டுமானால், அதிக சூரிய ஒளியும் இதற்கு தேவையில்லை.. ஆனால், குடுவையில் இந்த செடியை வளர்க்கக்கூடாது.. தரையில் வைத்து வளர்த்தால், வேர்கள் நன்றாக பரவி வளரும். அப்படி தரையில் படரவிடாமல், கயிற்றில் கட்டி படர விட வேண்டும்..

இந்த செடியில் பழுத்த இலைகள் இல்லாமல் பராமரிக்க வேண்டும். காரணம், அது வீட்டிலுள்ளவர்களின் உடல்நலக்குறைவை குறிக்கிறதாம். இலைகள் காய ஆரம்பித்தாலும் வெட்டிவிடலாம்..

எப்படி பராமரிப்பது:

எப்போதுமே மணி பிளாண்ட் பசுமையாக இருக்க வேண்டும்.. இதன் இலைகளை மஞ்சள் நிறமாக மாறும்வரை விடக்கூடாது.. இதற்கு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில், தண்ணீரை நிரப்பி, அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து கொள்ள வேண்டும்.. இந்த கலவையை செடியின் மீது தெளித்தால், இலைகளின் மஞ்சள் நிறம் நீங்கிவிடும்..

தேங்காய் எண்ணெய்க்கு பதில், ஆலிவ் எண்ணெய், கடுகு எண்ணெய், பாதாம் எண்ணெய் இப்படி ஏதாவது ஒன்றை சேர்க்கலாம். மல்லிகை எண்ணெய்யை சேர்த்தால், வீட்டில் கூடுதல் வாசனை கிடைக்கும்.

கிளைகள்:

அதேபோல, மணி பிளாண்ட் கொடி வகை என்பதால், அது வளரும்போது படர்வதற்கு ஏற்றவாறு கயிற்றை கட்டிவிட்டு, அதை செடியோடு சுற்றிவிட வேண்டும்.. அதிகமான கிளைகள் அல்லது தண்டுகள் வந்தாலும், அதனை லேசாக வெட்டிவிட்டு கொண்டே வந்தால், ம்ணிபிளான்ட் வேகமாக வளர உதவியாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *