widehunt
டாப் நியூஸ்ராசிபலன்ரியல் எஸ்டேட்ஜோதிடம்

2025 இல் புது வீடு, நிலம் வாங்கபோகும் ராசியினர் யார் தெரியுமா?

புது வீடு, நிலம் வாங்கபோகும் ராசியினர் இவர்கள் தானாம்… உங்க ராசியும் இதுல இருக்கா?

இந்த புத்தாண்டு தங்கள் வாழ்க்கையில் புதிய மற்றும் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வரும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். சிலர் குழந்தைகளைப் பெறுவார்கள், சிலர் தங்கள் வாழ்க்கைத் துணையை அல்லது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

சிலருக்கு வேலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும், சிலருக்கு வெற்றி பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கும். ஆனால் பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்க்கையில் காணும் ஒரு பொதுவான கனவு உள்ளது, அதுதான் தங்கள் கனவு இல்லத்தை சொந்தமாக்குவது என்பதாகும்.

ஒவ்வொருவரும் தங்கள் கனவுக வீட்டை வாங்க வேண்டும் என்று கனவு காண்கிறார்கள், அதில் அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் தங்கள் வாழ்க்கையை செலவிடலாம். ஆனால் அனைவரும் தங்கள் கனவு வீட்டை சொந்தமாக்குவதில் வெற்றி பெறுவதில்லை. சிலர் மிகவும் கடினமாக உழைத்து சொந்த வீட்டைப் பெறுகிறார்கள், சிலர் எவ்வளவு உழைத்தாலும் சொந்த வீட்டை பெற முடிவதில்லை. சிலரோ கடினமாக உழைக்காமலேயே சொந்த வீட்டைச் சொந்தமாக்குவதில் சிலர் வெற்றி பெறுகிறார்கள்.

வேத ஜோதிடத்தின்படி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இடத்தை தெரிந்து கொள்வதன் மூலம், சொந்த வீடு கட்டும் யோகங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

அதன்படி 2025 ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்குசொந்த வீடு கட்டும் அல்லது வாங்கும் அதிர்ஷ்டம் உள்ளது. அவர்கள் யாரென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கடகம்

கடக ராசியில் பிறந்தவர்களக்கு 2025 ஆம் ஆண்டு வாழ்வில் பல்வேறு நல்ல திருப்பங்கள் நிறைந்த மகிழ்சிகரமான ஆண்டாக அமையும்.

சொந்த வீடு வாங்க வேண்டும் என்று கொண்டிருந்த நீண்ட நாள் லட்சியம் இந்த ஆண்டில் நிறைவேறுவதற்காக யோகம் கூடிவரும்.

நிதி ரீதியில் இந்த ஆண்டில் எதிர்ப்பாராத வகையில் முன்னேற்றம் ஏற்படும்.நினைத்ததை விடவும் அதிகமான வெற்றிகளை குவிக்கும் ஆண்டாக அமையப்போகின்றது.

அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் இந்த ராசியினர் புதிய வீட்டில் குடியேறும் வாய்ப்பை பெறுவார்கள்.

கன்னி

கன்னி ராசியில் பிறந்தவர்களின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை நிகழ்த்தப்போகும் ஆண்டாக 2025 ஆம் ஆண்டு அமையப்போகின்றது.

தற்போது சொந்த வீட்டில் குடியிருப்பவர்களுக்கும் புதிய வீடு வாங்கும் அதிர்ஷ்டம் அமையப்போகின்றது. அல்லது வீட்டை புதுப்பிக்கும் அளவுக்கு நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

தொழில் விடயங்களில் புதிய முயற்சிகளால், அதிக லாபம் ஈட்டுவதற்கு வாய்ப்பு காணப்படுகின்றது. மொத்தத்தில் இந்த ராசியினருக்கு 2025 ஆம் ஆண்டு பொற்காலமாக அமையும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்தவர்களக்கு 2025 ஆம் ஆண்டு ஆரம்பித்த உடனேயே அதிர்ஷ்டகரமான மாற்றங்கள் நிகழ ஆரம்பிக்கும்.

வீட்டுக்கடன் பெற அல்லது பரம்பரை சொத்துக்களின் உதவியால் புதிய வீட்டை வாங்குவதற்கான யோகம் கூடிவரும்.

இவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு முழுவதும் சொத்துக்கள் வாங்குவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்த ஆண்டில் இவர்கள் நிதி நிலையில் அசுர வளர்ச்சி காணப்பார்கள்.

 

2025 இல் அதிர்ஷ்ட மழை கொட்டப்போகும் ராசியினர் இவர்கள் தான்.

https://widehunt.in/wp-content/uploads/2024/05/word-image-1519-3-300x117.jpeg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *