த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்து.
த்ரிஷாகுறித்துமுன்னாள்அதிமுகநிர்வாகிஅவதூறாகபேட்டிஅளித்ததுசர்ச்சையானநிலையில்அவர்தற்போதுமன்னிப்புகேட்டுள்ளார்.

சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, அண்மையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அவர் அளித்த பேட்டியில், கடந்த 2017 ஆம் ஆண்டு கூவத்தூர் தனியார் விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியிருந்தபோது, நடிகைகள் அழைத்து வரப்பட்டதாகக் கூறியதுடன், நடிகை த்ரிஷாவின் பெயரையும் வெளிப்படையாக குறிப்பிட்டிருந்தார்.
இது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த பிரச்சனைக்கு இயக்குநர் சேரன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த பிரச்சனை நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தளத்தில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.