தொகுப்பாளினி பிரியங்காவின் சொத்து மதிப்பு. இத்தனை கோடியா!
தொகுப்பாளினி பிரியங்காவின் சொத்து மதிப்பு. இத்தனை கோடியா!
பிரியங்கா தேஷ்பாண்டே – Priyanka Deshpande StarVijay
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மாகாபாவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.
StarVijay தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக கலக்கிக்கொண்டிருக்கும் பிரியங்கா, தன்னுடைய Youtube சேனல் மூலமாக ரசிகர்களை மகிழ வைத்து வருகிறார். வாழ்க்கையில் பல வேதனைகளை கடந்து வந்த பிரியங்கா, தற்போது நல்ல இடத்தில் இருக்கிறார். இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட மனம் உருகி பேசியிருந்தார்.
இந்த நிலையில், பல லட்சம் ரசிகர்கள் மனத்தில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள தொகுப்பாளினி பிரியங்காவும் சொத்து மதிப்பு குறித்த விவரத்தை தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.
சொத்து மதிப்பு :
விஜய் தொலைக்காட்சியில் கலக்கிக்கொண்டிருக்கும் தொகுப்பாளினி பிரியங்காவின் சொத்து மதிப்பு ரூ. 10 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இவர் ஒரு எபிசோட் தொகுத்து வழங்க
ரூ. 2 லட்சம் முதல் ரூ. 2.5 லட்சம் சம்பளம் வாங்கி வருகிறார் என கூறப்படுகிறது.