காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதி – வாக்குகளை அள்ளுமா?
ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய்! காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதி வாக்குகளை அள்ளுமா?
Congress Election Manifesto 2024 For Women :
மகளிர் மேம்பாட்டிற்கு காங்கிரஸ் என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறது என்பதை காங்கிரஸ் வழங்கிய ஐந்து பெரிய வாக்குறுதிகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த வாக்குறுதிகள் காங்கிரசுக்கு வாக்குகளை பெற்றுக் கொடுக்குமா?
Congress Guarantees Monetary Benefits To Women :
மக்களவைத் தேர்தலுக்கு முன் கட்சிகள் வெளியிடும் அறிக்கைகளில் தேர்தல் வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. பெண்களை மனதில் வைத்து காங்கிரஸ் வழங்கிய ஐந்து பெரிய வாக்குறுதிகள் பெண்களுக்கு அதிலும் ஏழை மகளிருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன. ஏனென்றால், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் உதவித் தொகை (Nari Nyay Guarantee) வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஏழைகளுக்கு நிச்சயம் மகிழ்ச்சியைத் தான் கொடுக்கும்.
பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக இந்த வாக்குறுதிகளை கொடுப்பதாக சொல்லும் காங்கிரஸின் இந்த வாக்குறுதிகளை, அந்தக் கட்சியின் 2019 தேர்தல் அறிக்கையின் புதிய பதிப்பு என்றும் சொல்லலாம். காங்கிரஸ் குறைந்தபட்ச வருமானத் திட்டம் (NYAY) என்ற வாக்குறுதியை கடந்த தேர்தலில் காங்கிரஸ் முன்வைத்தது.
இதன் கீழ், நாடு முழுவதும் உள்ள சுமார் 20 சதவீத ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் ரொக்க உதவி வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது. காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தால் இந்த திட்டத்தின் கீழ் சுமார் 5 கோடி குடும்பங்களை சேர்ந்த பெண்கள் பயனடைந்திருக்கலாம். ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வராததால், வாக்குறுதி வெறும் அறிக்கையாகவே நின்றுவிட்டது.