widehunt
கர்ப்பகாலம்குழந்தை வளர்ப்புமகளிர்

கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு வாரமும் குழந்தை எந்த அளவில் இருக்கும் என தெரியுமா?

கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு வாரமும் குழந்தை எந்த அளவில் இருக்கும் என தெரிந்து கொள்ள வேண்டுமானால் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு பெண் கர்ப்பமாகிவிட்டால், குழந்தையை கையில் எடுத்தும் கொஞ்சும் வரை அக்குழந்தையின் நினைவிலேயே இருப்பாள். கர்ப்ப காலத்தில் குழந்தை ஒவ்வொரு வாரமும் வளர்ச்சி பெறும். சொல்லப்போனால் குழந்தையின் வளர்ச்சி ஒரு அபூர்வமான ஒன்று என்றும் கூறலாம்.

pregnancy time
ஆம், ஒரு செல் மற்றொரு செல்லுடன் இணைந்து, பின் அந்த செல்கள் பெருகி, சில மாதங்கள் கழித்து, குழந்தையாக பிறக்கிறது என்றால் சாதாரணமான நிகழ்வா என்ன? உங்களுக்கு கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு வாரமும் குழந்தை எந்த அளவில் இருக்கும் என தெரிந்து கொள்ள வேண்டுமானால் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

1-2 வார காலத்தில், கருமுட்டையானது விந்தணுவுடன் இணைந்து, சிறிய கடுகு அளவில் இருக்கும். இந்நிலையில் கருவில் சுமார் 32 செல்கள் இருக்கும்.

5-ம் வாரத்தில், அந்த கரு சற்று வளர்ந்து மிளகு அளவு இருக்கும். இந்த காலத்தில் தான் இரத்த நாளங்கள், இதயம், தண்டுவடம் மற்றும் மூளை வளர்ச்சி பெற ஆரம்பமாகும். இந்த வாரத்தில் கரு சுமார் 0.05 இன்ச் இருக்கும்.

7 வாரத்தில் கரு 1/2 இன்ச், அதாவது ஒரு ப்ளூபெர்ரி அளவில் இருக்கும்.
pregnancy time

9 வாரத்தில் உங்கள் குழந்தை செர்ரிப் பழ அளவில் இருக்கும். 9 வாரத்தில் தான், கரு ஒரு உருப்பெற்ற கருவாகி இருக்கும்.

15 வாரத்தில் குழந்தை ஒரு ஆப்பிள் அளவில், அதாவது 4 இன்ச் இருக்கும். இந்த வாரத்தில் குழந்தை மெதுவாக நகர ஆரம்பிக்கும்.

18 வாரத்தில் குழந்தை 6 இன்ச் இருக்கும். 19 ஆவது வாரத்தில், குழந்தையின் கால்கள் வளர ஆரம்பிக்கும்.

22 வாரத்தில் குழந்தை சுமார் 10 இன்ச் அளவில் இருக்கும். இந்த காலத்தில் குழந்தையின் நுரையீரல் வளர ஆரம்பமாகும்.

30 வாரம் இந்த வாரத்தில் கருப்பையில் இருக்கும் குழந்தை தூங்குவதையும், விழித்துக் கொண்டிருப்பதையும் உணர முடியும். 30 வார காலத்தில் குழந்தை சுமார் 15 இன்ச் அளவில் இருக்கும்.

40-42 வாரம் இது கர்ப்ப காலம் முடிவடையும் காலமாகும். இந்த காலத்தில் குழந்தை 20 இன்ச் அளவில் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *