குழந்தை வளர்ப்பும் பெற்றோர் கடமையும்
குழந்தைக்குத் தேவை…
உங்கள் குழந்தைக்கு நிறைய அரவணைப்பு தேவை. உங்களது குழந்தைக்கு நீங்கள் செய்ய இருக்கும் சின்னச்சின்ன விஷயங்கள் அவனது வளர்ச்சியை பாதிக்கும். உங்களது குழந்தை மிகவும் சிறியதாக இருந்தாலும், அவனுக்கு தேவைகள் உள்ளன, இதில் தான் இந்த சிற்றேடு உங்களுக்கு உதவ முடியும்.
குழந்தைக்கு… அரவணைப்பு தேவை.
உங்களது குழந்தை நோயுற்று இருக்கும் பொழுதோ, சோர்வாக இருக்கும் பொழுதோ அல்லது சினமுற்ற மனநிலையில் இருக்கும் பொழுதோ, உங்களது அரவணைப்பு அவளுக்கு தேவைப்படுகிறது. ஒரு குழந்தை அழும் போது, அது தன் தேவையை உங்களுக்கு தெரியப்படுத்துகிறது. உங்களது குழந்தையை அள்ளியணைத்து, அன்பான வார்த்தைகள் சொல்லி அவளை கொஞ்சுங்கள். இது உங்களது குழந்தையை கெடுப்பது ஆகாது.உங்களது குழந்தையை அரவணைத்த பின்னும் அவள் உடனடியாக அழுகையை நிறுத்தாவிட்டாலும் கூட, அவளது அழுகையை நீங்கள் கேட்டதையும், அவள் உங்களுக்கு முக்கியம் என்பதையும், அவளுக்காக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதையும் அவளுக்கு உணர்த்துகிறீர்கள். இது அவளுக்கு பாதுகாப்பையும் நம்பிக்கையையும் அளிக்கிறது.
குழந்தைக்குத் தேவை… படித்துக் காட்டுவது
- பிறந்த முதல் நாள் தொடக்கம், கைக்குழந்தைகள் உட்பட, குழந்தைகளுக்குப் படித்துக் காட்டவோ அல்லது கதைகள் சொல்லவோ வயது ஒரு தடையல்ல. படுக்கும் முன்போ பகல் நேரத்திலோ புத்தகங்களைப் படிப்பதோ அல்லது படங்களைப் பற்றி பேசுவதோ ஒரு நேர அட்டவணையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.
- ஒரு கதையின் புதிய வார்த்தைகளை கேட்டும் போது கைக்குழந்தைகள், வார்த்தைகளையும் வாக்கியங்களையும் கற்றுக் கொள்ள தமது மூளைகளை தயார்படுத்திக் கொள்கின்றனர்! மேலும் பிரமாதமான படங்கள் உடைய புத்தகங்களை தொட்டுப் பார்க்க குழந்தைகள் மிகவும் விரும்புவர்.
குழந்தைக்குத் தேவை… பேசக் கற்றுக் கொள்வது
பிறர் பேசுவதைக் கேட்கும் குழந்தைகள், ஒலிகள், வார்த்தைகள் மற்றும் வாக்கியங்களை கற்றுக் கொள்கின்றன. நீங்கள் செய்வதை எல்லாம் குழந்தைக்கு விளக்கமாகக் கூறுங்கள்:
- “அம்மா உருளைக்கிழங்கு உரிக்கிறேன்.”
- “நீ சுத்தமாக இருக்க வேண்டும் என்று அப்பா உன் டயபரை மாற்றுகிறார்.”
- “பார், உன் மாமாவும் மாமியும் உன்னை பார்க்க வந்திருக்கிறார்கள்!”
- “பந்தைப் பிடி,” போன்றவை.
நீங்கள் பலசரக்குக் கடைக்குச் செல்லும் போது, நீங்கள் பார்ப்பதைப் பற்றியெல்லாம் குழந்தையுடன் பேசுங்கள். இந்த வார்த்தைகளை எல்லாம் சொல்வது, உங்கள் குழந்தையை வாழ்க்கையில் ஒரு சுறுசுறுப்பான ஆரம்பத்துக்கு தயார் செய்யும். மேலும், பள்ளியில் வெற்றி பெற அடிப்படையானது பேசக் கற்றுக் கொள்வது தான்!
குழந்தைக்குத் தேவை…பராமரிப்பு.
- உங்கள் குழந்தையை கண்காணித்தும், அபாயத்தை உண்டாக்கும் பொருட்களை அப்புறப்படுத்தியும், உங்கள் குழந்தை பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். “நிறுத்து”, “அது சூடாக இருக்கிறது”, “அப்பாவின் கையை பிடித்துக் கொள்” போன்ற வார்த்தைகளை கற்றுக் கொடுங்கள்.
- உங்கள் தினசரி நடவடிக்கைகளில் கவனம் தேவை:
- உணவுக்கு முன் உங்கள் கைகளையும் உங்கள் குழந்தையின் கைகளையும் கழுவுங்கள்.
- கார் சீட்டில் குழந்தைக்கு சரியான முறையில் பக்கிள் போடப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்
- உணவுநேரத்தின் போது குழந்தையையும் உடன் வைத்திருங்கள், ஏனென்றால் இது உங்களுக்கும் மொத்த குடும்பத்துக்கும் ஒரு அற்புதமான பொழுதாகும்.
- வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் குழந்தையை வெளியே அழைத்துச் செல்லுங்கள்.
- குழந்தை இருக்கும் இடத்தில் நீங்கள் புகை பிடிக்காதீர்கள், மற்றவர்கள் பிடிப்பதை அனுமதிக்காதீர்கள்.
- ஒரு சமூக ஆரோக்கிய சேயையாளருடனோ, உங்கள் குடும்ப மருத்துவருடனோ அல்லது மருந்துக் கடை நிபுணருடனோ (pharmacist) உங்கள் குழந்தையின் உடல்நலம் பற்றி பேசுங்கள்.
- அவர்கள் உங்களுக்கு ஆலோசனை வழங்கலாம். முக்கியமாக, உங்கள் குழந்தை வளர்வதற்கு எல்லா வகையிலும் உங்கள் ஆர்வம் தேவை என்பதை மறவாதீர்கள். ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியும் வேறுபடும், உங்களது குழந்தையை கண்காணித்து அவனை நன்கு அறிந்து கொண்டால் அவனது தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்யலாம்.