widehunt
அடுத்து என்ன படிக்கலாம்?கல்வி

மாணவர்கள் தற்கொலைக்கான காரணங்கள்.

இதனை எவ்வாறு தடுப்பது?

சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியின் பதில்

  1. படிப்பு சார்ந்த சிரமங்கள்
  2. தனிப்பட்ட சிரமங்கள்
  3. நிதி சார்ந்த சிரமங்கள்
  4. மருத்துவ பிரச்சினைகள்

என இதற்கு நான்கு காரணங்கள் இருக்கின்றன. இந்த நான்குமே கலந்தும் இருக்கலாம். இந்த கோவிட் காலத்தில் மாணவர்களின் சமூக தொடர்பும் குறைந்துபோய்விட்டது. மாணவர்களில் பலர் வீட்டிலேயே இருந்துவிட்டு திடீரென கல்லூரிக்கு வருகிறார்கள். இது சமூகம் சார்ந்த சிரமங்களை ஏற்படுத்துவதாக உலக சுகாதார நிறுவனமும் ஒப்புக்கொண்டிருக்கிறது.

மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த செயல்களைச் செய்ய முடிந்தால் அவர்களுக்கு மன அழுத்தம் இருக்காது. இரண்டாவது, இணை திறன் அதாவது ஏதாவது பாடல் பாடுவது, ஆடுவது, இசை இசைப்பது, ஓவியம் வரைவது, போட்டோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு மன அழுத்தம் குறைவாகவே இருக்கிறது. எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் சிறியவர்களாக இருக்கும்போதே, ஏதாவது ஒன்றில் ஈடுபாடு கொள்பவர்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.”

நாட்டின் வளர்ச்சிக்கும் அதன் எதிர்கால இலக்குகளை அடையவும் நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?

“வரும் 2047-ல் இந்தியா வல்லரசாக மாற வேண்டும். இன்றைய மாணவர்கள், இளைஞர்கள் நாளை தலைவர்களாக வர வேண்டும். இதற்கு இந்தியாவில் நிறைய வேலை வழங்குபவர்கள் தேவை. வேலை பார்ப்பவர்கள் தேவை. இதற்கு எல்லோரும் innovation and entrepreneurship-ல் கவனம் கொடுக்க வேண்டும்.

நீடித்த நிலையான வளர்ச்சி என்பது மிகவும் முக்கியமானது. எதிர்காலத்திலும் இதேபோன்ற மின்சாரம் கிடைக்குமா; தண்ணீர் கிடைக்குமா; காற்று கிடைக்குமா; சுற்றுச்சூழல் கிடைக்குமா என்ற கேள்விகள் முக்கியமானவை. நாம் படிக்கும் எல்லா படிப்புமே இந்த நீடித்த நிலையான வளர்ச்சியோடு இணைந்து போக வேண்டும்.

நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் குறித்து அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டும். குழைந்தைகளுக்கும் எடுத்துக்கூற வேண்டும். இதற்கு ஏற்ப நாமும் யோசிக்க பழக வேண்டும். நீடித்த நிலையான வளர்ச்சிக்காக நாம் பல்வேறு உத்தரவாதங்களை வழங்கி இருக்கிறோம். கரியமில வாயுவை பூஜ்ஜியமாக குறைப்போம் என கூறி இருக்கிறோம். இதை குறுகிய காலத்தில் நாம் அடைய வேண்டுமானால், அரசின் கட்டுப்பாடுகளால் முடியாது. பொதுமக்கள் அனைவரின் பங்களிப்போடு இது நிகழ வேண்டும்.

நான்காவது, நாம் எல்லாவற்றையும் பேட்டர்ன் செய்ய வேண்டும். நமது ஐடியாவை நாம் ப்ரடக்ட் செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அதன் முழுமையான தாக்கம் நமக்கு கிடைக்கும். எனவே, கல்லூரி அளவிலும் சரி , தனி நபர் அளவிலும் சரி தங்களுக்கு கிடைக்கும் ஐடியாவை பேட்டர்ன்செய்ய வேண்டும் என எண்ண வேண்டும். இந்தியா வல்லரசாக மாற இது மிகவும் முக்கியம்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *